இதனால் அறை கதவை திறந்து பார்த்தனர். அப்போது 2 பேரும் பிணமாக கிடந்தனர். அவர்கள் உடல் அருகில் மதுபாட்டிலும், விஷ பாட்டிலும் இருந்தது.
இதைதொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் பலியான 2 பேர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பலியானவர்கள் திருப்பூர் அரண்மனைபுதூர் பகுதியை சேர்ந்த பெயிண்டர் கண்ணன் (37) மற்றும் அவரது நண்பர் ஜான் பாஷா (48) என தெரிய வந்தது.
தற்கொலை செய்து கொண்ட கண்ணனின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து சென்று விட்டார்.
இதனால் கண்ணன் நண்பர்களுடன் லாட்ஜில் தங்கி மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று கண்ணன் வாழ்க்கையில் வெறுப்படைந்து மதுவில் விஷம் கலந்து குடித்தார். பின்னர் அவர் சிறிதுநேரத்தில் கட்டிலில் படுத்தப்படி பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே சிறிது நேரம் கழித்து நண்பர் ஜான்பாஷா வந்துள்ளார். போதையில் கண்ணன் தூங்குவதாக நினைத்து, கண்ணன் மீதி வைத்திருந்த விஷம் கலந்த மதுவை குடித்து விட்டார். இதில் அவரும் பலியானது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.