கன மழைவால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை மத்திய குழு ஆய்வு செய்யவுள்ளது. வெள்ள சேதங்கள் குறித்து தமிழக அரசு அதிகாரிகளுடனும் அக்குழு ஆலோசனை நடத்தவுள்ளது.
இந்த குழுவின் மதிப்பீட்டின்படியே, தமிழகத்திற்கு அடுத்தபடியாக வழங்க வேண்டிய நிவாரண உதவி குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்க 8 ஆயிரத்து 481 கோடி ரூபாய் தேவை என்றும், பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்றும் பிரதமரை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார்.