மத்திய மந்திரி அருண் ஜெட்லி முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து

ஐந்தாவது முறை தமிழக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவுக்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி வாழ்த்து கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழக முதலமைச்சருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகின்றேன். நல்லாட்சி புரிய அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள் என்று கூறியதுடன் தமிழக திட்டங்களுக்கு போதிய நிதியுதவி அளிக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், வெங்கைய்யா நாயூடு, நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சரத்குமார், பிரபு, நடிகைகள் சச்சு, எம்.என். ராஜம் ஆகியோரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அருண் ஜெட்லிஜெயலலிதாதமிழக முதல்வர்பொன்.ராதாகிருஷ்ணன்மத்திய மந்திரிவாழ்த்துவெங்கைய்யா நாயூடு
Comments (0)
Add Comment