மனிதவுரிமை மீறல்கள் குறித்து பக்கசார்பற்ற நம்பகமான விசாரணை!

கடந்தகால மனித உரிமை துஷ்பிரயோகங்கள் குறித்து நம்பகத்தன்மை மிக்க பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பது உண்மையை கண்டுபிடித்து குற்றவாளிகளை பொறுப்பாளிகளாக்குவது இலங்கை சமூகத்திற்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் மிகவும் முக்கியமானது என ஐ.நா செயலாளர் நாயகம் இலங்கைக்கான விஜயத்தின் முன்னதாக கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் தீர்மானம் குறி த்து அர்ப்பணிப்புடன் விளங்கும், அதனை நடைமுறைப்படுத்தும், என எதிர்பா ர்க்கிறேன் எனவும் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விஷேட செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்ககையில் பொறுப்புக்கூறல்கள் காணப்படவேண்டும் என்ற ஐக்கிய நாடு களின் கோரிக்கைகள் தனித்துவமானவையல்ல என தெரிவித்துள்ள ஐ.நா செயலாளர் நாயகம், சர்வதேச குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பது ஐக்கிய நாடுகளின் முக்கியமான நிகழ்ச்சி நிரல் எனவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்டமீறல்கள் இடம்பெற்ற பிராந்தியங்கள், மற்றும் நாடுகளில் தாங்கள் இந்த வேண்டுகோளை விடுப்போம் எனவும் பான் கீ மூன் கூறியுள்ளார்.
இலங்கைகோரிக்கைசர்வதேசம்பான் கீ மூன்போர்குற்றம்மனிதவுரிமையுத்தம்
Comments (0)
Add Comment