மனித உரிமை ஆர்வலரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கே.வி. தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்திய பிரமாணம்..

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட  25 சிரேஸ்ட சட்டத்தரணிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக ,உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்றைய தினம்  சத்திய பிரமாணம் செய்துள்ளனர்.

இந்த சத்தியபிரமாண வைபவத்தில் மனித உரிமை ஆர்வலரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கே.வி. தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் விளம்பரப்படுத்திக் கொள்வதை விரும்பாது, தமிழ் மக்கள் பிரச்சினைகளில் சிக்கும் போது ,

தனது வாதத்திறமையால் வெற்றிப் பெற்றுக் கொடுத்த சட்டத்தரணி கே.வி.தவராசாவிற்கு ஜனாதிபதியால் மிகச் சிறந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கே.வி. தவராசாசத்திய பிரமாணம்ஜனாதிபதி சட்டத்தரணிநீதியரசர்கள்
Comments (0)
Add Comment