இவற்றுக்கு ஜேர்மனியிலுள்ள நிரந்தர மக்கள் விசாரணை மன்றம் எனப்படும் அமைப்பு இயங்குகின்றன. அதற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தலைமை தாங்குகின்றது என்றும் அவர் கூறினார்.
பத்தரமுல்லையிலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் உத்வேகத்துடன் வைத்திருப்பதும் மனித உரிமைகள் பேரவைய சிறிலங்காவிற்கு எதிரான ஒரு தீர்மானத்தை இயற்ற உறுப்பு நாடுகளை தூண்டிவிடுவதும் இந்த இரண்டு அரச எதிர்ப்பு அமைப்புகளினதும் நோக்கமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.