மேற்படி விளம்பரப் பலகை, அது ஸ்தாபிக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து சுமார் 2.5 கிலோமீற்றர் தூரம் வரையுள்ள நுளம்புகளை தன்பால் கவர்ந்திழுத்து கொல்லும் வல்லமையைக் கொண் டது என அந்த விளம்பரப் பல கையை வடிவமைத்த போஸ் டர்ஸ் கோப் மற்றும் என்.எஸ்.பி. ஆகிய நிறுவனங்கள் உரிமை கோரியுள்ளன.
பிரேசிலில் நுளம்புகளால் பரவும் ஸிகா வைரஸ் நோய் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இந்த விளம்பரப் பலகை அந்நோயின் பரவலை தடுக்க உதவும் என அந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்தத் திறந்தவெளி விளம்பரப் பலகை மக்கள் செறிந்து வாழும் மேற்படி பிராந்தியத்திற்கு மேலும் நுளம்புகளை கவர்ந்திழுக்கும் அபாயமுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.