மன்னார்-அடம்பன் பொலிஸ்  பிரிவில் சுமார் 820 கிலோ  பீடி சுற்றும் இலைகள் மீட்பு..

மன்னார்-அடம்பன் பொலிஸ்  பிரிவில் சுமார் 820 கிலோ  பீடி சுற்றும் இலைகள் அடங்கிய பொதிகளை இன்று காலை அடம்பன் பொலிஸார்  மீட்டுள்ளனர்.

அடம்பன் பொலிஸாருக்கு  கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து  அடம்பன்  கீலிக்கரையான் கடற்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 13 பொதிகளை பொலிஸார் கைபற்ரியுள்ளனர்.

எனினும்  இந்த சம்பவம் தொடர்பில்  சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடம்பன்சந்தேக நபர்கள்பொலிஸார்மன்னார்
Comments (0)
Add Comment