மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இதுவரை மீட்கப்பட்டுள்ள 42 எலும்புக்கூடுகளும் இன்று வரை அடையாளம் காணப்படவில்லை என சிறீலங்கா காவற்துறைப் பேச்சாளர் ரோகண கூறியுள்ளார்.
இதில் நகைப்பிற்குரிய விடயம் என்னவென்றால் கொலை செய்த இராணுவத்தையும், குற்றப்புலனாய்வுப் பிரிவையுமே விசாரணை செய்வதற்கு சிறீலங்கா அரசு நியமித்திருப்பது தான்.
காணாமற்போனோரின் உறவுகள் தங்கள் கணவன்மாரை, பிள்ளைகளை, சகோதர்களை, தந்தையை கண்டுபிடித்து தருமாறு தாயகம் முழுவதும் சிறீலங்கா அரசிடம் வேண்டு கோள் விடுத்து வீதியில் இறங்கி நீதி கேட்கும் இவ்வேளையில் இவ்வாறான மனித எலும்புக்கூடுகள் யாருடையதென விசாரணை செய்வதற்கு ஒரு விசாரணைக்குழு தேவை தானா????