மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….

மன்னார்  சதொச புதைகுழி அகழ்வு பணி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாது கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னாரில் தற்போது மழை பெய்வதற்கான காலநிலை காணப்படுகின்றதால் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக சதொச  வளாகத்தில் தோண்டப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்படாமல் உள்ள மனித எச்சங்கள் சேதப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் மழை பெய்தால் மனித எச்சங்கள் பாதிக்காத வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் சாதாரண பாதுகப்பு ஏற்பாடுகள் மாத்திரமே செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந் நிலையில் மழை பெய்யும் பட்சத்தில் குறித்த புதை குழியானது முற்றாக சேதப்படும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றது .

இது தொடர்பில்  உரிய நிறுவனங்கள் இந்த விடயத்தில் அக்கறையுடன் செயற்படுமாறு மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அகழ்வுநிறுத்தம்மன்னார். சதொசவளாகம்
Comments (0)
Add Comment