நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தனியாருக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கப்பட்டதில் மத்திய அரசுக்கு 1,86,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்ப்பட்டதாக மத்திய தலைமை தணிக்கை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்தார்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்திய இந்த புகார் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழி காட்டுதலின்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் நிலக்கரி துறை செயலாளர் பி.சி.பரக் முதல் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை விசாரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் சி.பி. ஐ.க்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலக்கட்டத்தில் மன்மோகன் சிங் நிலக்கரி இலக்காவை கவனித்து வந்ததால் அவர் பதவி விலக வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர் கட்சிகள் போராட்டங்கள் நடத்தினர்.