மருத்துவர்களின் அலட்சியத்தால் பலியான தாய்!

தனது முதலாவது குழந்தை தாய் பால் குடிக்க மறுத்ததால் களுத்துறை – நாகொட மருத்துவனைக்கு வந்த தாய் ஒருவர் மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயாகல – கட்டுகுறுந்து வத்தை பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 17ஆம் திகதி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மறுநாள் குழந்தையை பிரசவித்த நிலையில் அன்று மாலையே மருத்துவனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

மீண்டும் 19ஆம் திகதி குழந்தையுடன் மருத்துவமனைக்கு வந்த அவர், தனது குழந்தை பால் குடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குழந்தை, குழந்தைகள் பராமரிக்கும் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாய் மருத்துவமனையில் தங்கியிருந்துள்ளார்.

இதேவேளை கடந்த 24ஆம் திகதி இரவு குறித்த தாய் திடீரென நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் கடந்த 25ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த தாய் தொடர்பாக மருத்துவனை அதிகாரிகள் உரிய அவதானம் செலுத்தவில்லை என உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்துள்ள தாயின் உடலில் கிருமி தொற்று ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பிரேத பரிசோதனையில் திறந்த தீர்ப்பொன்று பெற்று கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், குறித்த தாயின் மரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

உறவினர்கள்கிருமிகுழந்தைதாய்தொற்றுநோய்பலிபிரசவம்
Comments (0)
Add Comment