மலேசியாவில் களை கட்டிய தைப்பூச திருவிழா..

இன்று  இந்துக்கடவுளான அழகன் முருகனிற்கு உரிய தைப்பூச நன்நாள். இன்றைய நாளிலே இந்து ஆலயங்களிலே முருகபபெருமானிற்கு சிறப்பு அபிக்ஷேக ஆராதனைகள் இடம்பெறும்.

பல நாடுகளிலும் வாழும் இந்துக்கள் இன்று  முருகப்பஎருமானிற்கு தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி  மகிழ்வார்கள்.

அந்தவகையில் மலேசியாவில் தைப்பூச திருவிழா பரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

அந்நாடு முழுவதும் உள்ள முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் பல்வேறு விதமான காவடிகளை தூக்கி முருகனுக்கு நேர்த்திக்கடன் கழித்தனர்.

இதே போன்று கோவில்களில் திரண்ட பல்லாயிரம் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

கோலாலம்பூர் அருகே உள்ள பத்து மலை முருகன் கோவிலில்  இன்று நடைபெற்ற விசேட வழிபாட்டில் பல்லாயிரம் பேர் பங்கேற்றனர்.

தைப்பூச திருவிழாவை ஒட்டி மலேசியாவில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தேசிய விடுமுறை (தைப்பூசம்மலேசியா
Comments (0)
Add Comment