இலங்கையர்களை ஏற்றிச் சென்ற படகொன்று மலேசியப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நோக்கி அவர்கள் பயணித்தபோதே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மலேசிய அரசு
கடந்த முதலாம் திகதி புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டதாக என்று மலேசிய அரசு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த படகில், ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட 131 பேர் பயணித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.