மாங்குளத்தில் இன்று மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு…

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் கௌரவிப்பும் அவர்களுக்கான  ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வும்  19.11.18 அன்று மாங்குளத்தில்  நடைபெற்றுள்ளது

இந்த நிகழ்வில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு உலர் உணவு பொதிகளை வழங்கிவைத்துள்ளார்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணி தலைவர் எஸ்.தவபாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் தயார் செல்வராணி அவர்கள் ஏற்றிவைக்க தொடர்ந்து சுடர்களை புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஏ.இரத்தினவடிவேல், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் க.விஜயகுமார்,மாங்குளம் மகாவித்தியால அதிபர் யோகானந்தராஜா , மற்றும் கிந்துஜன் ஆகியோர் ஏற்றிவைத்துள்ளார்கள்.

மாங்குளம் பிரதேசத்தினை சேர்ந்த மாவீரர் குடும்பங்களை சேர்ந்த 50 குடும்பங்களுக்கு ஒரு தொகுதி உலர் உணவு பொருட்களம் தென்னங்கன்று ஒவ்வொன்றும்  இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளது

எஸ்.தவபாலன்கௌரவிப்புதமிழ்தேசிய மக்கள் முன்னணிபெற்றோர்கள்மாவீரர்கள்
Comments (0)
Add Comment