இதன்போது மாணவர்கள் மீது பாதுகாப்புத்தரப்பினர் தாக்குதல் மேற்கொண்டதன் காரணமாக 17 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த 17 மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சில மாணவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, போராட்டத்தைக்கட்டுப்படுத்த பொலிஸார் ஐந்து முறை கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் தண்ணீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், மாணவர்கள் காயமடைந்ததுடன், சிலர் கைது செய்யப்பட்டதால் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியில் பதற்றநிலை மேலும் தொடர்கின்றது.