மாணவிகள் எப்படியான உடைகளை அணிய வேண்டும்? கொழும்பில் சுவரொட்டி

கொழும்பின் பிரபல்யமான  ஆண்கள்  கல்லூரியின் சுவரொன்றில், மாணவிகள் எப்படியான உடை அணிந்து கல்லூரிக்கு வரவேண்டும் என்பது பற்றிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது, பலரின் கோபத்தைக் கிளறியுள்ளதாக பிபிசியின் இலங்கை  நிருபர் ஆயிஷா பெரேரா கூறியுள்ளார்.
கொழும்பின் பிரபல்யமான ஆண்கள் கல்லூரியான சென்ட் ஜோசப் கல்லூரியில் 16 படங்கள் அடங்கிய சுவரொட்டி கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தப் 16 படங்களிலும் கல்லூரி மாணவிகள் வெவ்வேறு விதமான உடைகள் அணிந்து காணப்படுகின்றார்கள். இவற்றுள் எது அனுமதிக்கத் தக்கது என்பதை இந்த  சுவரொட்டிகள் குறித்திருப்பதுதான் பலருக்கு கோபத்தை வரவழைத்துள்ளது.
பாரம்பரிய சேலை உடையை ஏற்கும் அதே நேரத்தில் மினி பாவாடை விலக்கப்பட்டுள்ளது.
சென்ட் ஜோசப் கல்லூரியின் நிர்வாக உறுப்பினர் ஒருவர் கல்லூரிச் சீருடைகளுக்கென ஒரு விதிமுறை இருக்கின்றது. பாடசாலைக்கு வருவதாக இருந்தால் முறைப்படி மாணவிகள் உடை உடுத்த வேண்டியது மிக அவசியம்; என்று கூறியிருக்கினறார்
இன்னொரு கொழும்புப் பிரபல்யமான சென்ட் பீட்டர்ஸ் கல்லூரியிலும் இதே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இப்பொழுது எங்களுக்கும் இவர்கள் உடைபற்றித் தெரியும். பெண்கள் இந்த ஆடை  விதிமுறை மாறினால் பாடசாலைக்குள் அனுமதிக்க முடியாது என்று கல்லூரி நிர்வாக உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கின்றார்.
அப்படியானால் நடு வயிறு தெரிய மாணவிகள் சேலை உடுத்துவதற்கு என்ன செய்யப் போகின்றார்கள்? நாங்கள் ஆண்களின் சாரந்தான் அணிந்து வரவேண்டும் என்று கோபத்தோடு பலர் தம் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.
அரச பாடசாலைகளில் இப்படியான சுவரொட்டிகள் ஒட்டப்படுவது சாதாரணம் என்றாலும்,  பிரபல்யமான கல்லூரிகளில் இப்படியான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது பலரின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.
ஆண்கள்ஆபாசம்உடைசுவரொட்டிபாரம்பரியம்பாவாடைபெண்கள்மாணவிகள்
Comments (0)
Add Comment