மாதாந்த நினைவுவணக்க நிகழ்வு சித்திரை 2018

 

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் சித்திரை மாதத்தில் ஆனந்தபுரத்தில் வீரகாவியம் படைத்த எமது நாயகர்கள் மற்றும் இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராக உண்ணா நோன்பிருந்து வீரச்சாவடைந்த அன்னை பூபதி,அனைத்து மாவீரர்கள், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் உட்பட இதுவரை காலமும் அன்னிய சிறீலங்கா அரசபடைகளினால் படுகொலை செய்யப்பட்ட  அனைத்து மக்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் லண்டனில் , வழமைபோல் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் (OX17 3NX)  நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில் புலிகொடி ஏற்றப்பட்டு மாவிரர்களிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
 நினைவு வணக்க நிகழ்வில்   எம்மினத்தின் விடுதலைக்காக உயிர்கொடுத்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் ஈகைச்சுடரேற்றியும்  மலர்வணக்கம் செலுத்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது .
              
தமிழீழ மாவீரர் பணிமனைதமிழீழ விடுதலைபோராட்டம்மாவீரர்
Comments (0)
Add Comment