மாத்தறையில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு.

மாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் இன்று காலை கொள்ளை  சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது  பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 03 பொலிஸார் காயமடைந்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.

இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்

குறித்த சம்பவத்தில் பொலிஸார் தவிர மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதுடன் அதில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளை.பொலிஸார்நகைக்கடைமாத்தறை
Comments (0)
Add Comment