முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்தளன் பிரதேசத்தினை சேர்ந்த மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைஆணைக்குழுவின் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தலைமையிலான குழுவினர் சென்று ஆராய்ந்துள்ளார்கள்.. புதுமாத்தளன் மீனவர் சங்க கட்டத்தில் 17.07.19 இன்று நடைபெற்ற இந்த சந்திப்பின்போது எட்டு கிராமங்களை சேர்ந்த மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளார்கள்.
இந்த கிராமத்தினை சேர்ந்த மீனவர்களுக்கு நவீனமுறையிலான மீன்பிடித் தொழிலுக்கு கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் அனுமதி மறுத்துள்ளதை எதிர்த்து கடந்த 02.07.19 அன்று மனிதஉரிமை ஆணைக்கழுவின் வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள். இதற்கு அமைவாக மனித உரிமைஆணைக்குழு வின் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தலைமையிலான மனித உரிமை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு கலந்துரையாடி மீனவர்களின் பிரச்சனை தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்கள்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாத்தளன் பிரதேச மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் எமக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு முக்கியமான காரணம் ரவிகரனும் அதற்கு பின்னால் இருக்கும் கூட்டமைப்பின் ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை நாடுமுழுவுதும் அனுமதி வழங்கிவிட்டு குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகின்றமை அரசியல் நோக்கம் இருக்கோ என்றும் சந்தேகப்படுவதாகவும் மீனவர்கள் தெரவித்துள்ள அதேவேளை முல்லைத்தீவு கடலில் நாங்கள் தொழில் செய்யமுடியாது வெளிமாவட்டங்களில் இருந்து வந்து தொழில் செய்கின்றார்கள்.
தென்பகுதி,கிழக்கு மாகாணத்தில் இருந்து வந்து கடலில் தடைசெய்யப்பட்ட தொழிலினை செய்து வருகின்றார்கள் இலங்கையில் அனுமதிக்கப்பட்ட தொழிலினை செய்முடியாத நிலையில் நாங்கள் இருக்கின்றோம் இதற்கான அனுமதியினை கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் மறுத்து வருகின்றது தொடர்ச்சியாக இவ்வாறான நிலையினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
எங்கள் கடலில் உள்ள வளங்களை நாங்கள் எடுக்காமல் வெளிமாவட்டத்தினை சேர்ந்தவர்கள் எடுக்கின்றார்கள் சாலைப்பகுதியில் 400 வரையான வெளிமாவட்ட மீனவர்களின் படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது அங்கு அவர்கள் தொழில் செய்வதால் கடலில் நாளாந்தம் நுற்றுக்கணக்கான படகுகள் பயணம் செய்கின்றன இதால் எங்கள் கரையோ தொழிலாளர்களின் வலைகள் அறுக்கப்பட்டு தொழில் பாதிக்கப்படுகின்றன இவற்றை எல்லாம் கண்டுகொள்ளதா நிலையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் காணப்படுகின்றது.
இன்னிலையில் இலங்கையில் சட்டத்தில் உள்ள லைலா வலையினை நாங்களும் செய்யவேண்டும் எனகோரி பலதடவைகள் அனுமதிகோரியுள்ளோம் ஆனால் அதற்கான இனுமதி கிடைக்காத நிலையில் மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளோம் இதன் படி இன்று எங்கள் பிரச்சனைஅனைத்தினையும் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளரிடம் தெரிவித்துள்ளோம் நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்பியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்