மாநிலங்களவையை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் உடன்பாடு

நடப்புக் கூட்டத் தொடரின் எஞ்சியுள்ள நாட்கள்வரை மாநிலங்களவையை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

 இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளதால், எஞ்சியுள்ள 3 நாட்கள் அவையை சுமூகமாக நடத்த உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கேட்டுக்கொண்டார்.

 இதையடுத்து எஸ்.சி. , எஸ்.டி. பிரிவினருக்கு எதிராக குற்றங்களின் ஈடுபடுவோரின் தண்டனையை கடுமையாக்குதல் உள்ளிட்ட 6 மசோதாக்களை வரும் நாட்களில் நிறைவேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. எனினும் ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்றுவதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

அனைத்துக்கட்சிக் கூட்டம்உடன்பாடுகூட்டத் தொடர்மாநிலங்களவைமுக்கிய மசோதாக்கள்
Comments (0)
Add Comment