இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் செய்திளாளர்களை சந்தித்தார். அப்போது அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி: மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 24ஆம் தேதி முதல் தொடங்குகிறதே? தி.மு.கழகத்தின் சார்பில் யார் போட்டியிடுகிறார்கள்?
பதில்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களாக கழக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, கழகச் செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் அறிவிக்கப்படுகிறார்கள்.
கேள்வி: தொ.மு.ச. சார்பில் வேட்பாளர் நிறுத்தப்போவதாகக் கூறப்பட்டதே?
பதில்: அடுத்து வரும் வாய்ப்புகளில் தி.மு.கழகத் தொழிற் சங்கத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.
அதிமுகவுக்கு 4 எம்.பி.க்களுக்கான வாய்ப்பு:
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 134, திமுக கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தைப் பெற 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அதன்படி அதிமுக 3, திமுக 2 இடங்களில் எளிதாக வெற்றி பெறும். 6-வது இடத்தைப் பெறும் வாய்ப்பு அதிமுகவுக்கு அதிகம் உள்ளது.