மாந்தை கிழக்கில் ஏற்பட்டிருக்கும் நீர்ப்பற்றாக்குறையை தீர்க்க முன்வருமாறு கோரிக்கை …

மாந்தை கிழக்கின் ஏற்ப்பட்டிருக்கும் நீர்ப்பற்றாக்குறையை தீர்க்க சம்மந்தப்பட்டவர்கள்  முன்வருமாறு மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தயானந்தன் அழைப்பு விடுத்துள்ளார்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்ப்பட்ட கொள்ளவிலான்குலம் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் 36 ஆவது மாதிரிக்கிராமத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தயானந்தன் அவர்கள் உரைநிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்,  கௌரவ வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களை நாங்கள் பலமுறை சந்தித்து இருந்ததாகவும்,

அவர் பல வாக்குறுதிகளை அளித்ததற்கு இணங்க எமது மாந்தை கிழக்கு பிரதேசத்தில் எமது வீட்டு பிரச்சனைகளை தீர்க்கும் முகமாக எமது கோரிக்கையை ஏற்று  பல வீட்டுத்திட்டன்களை அந்தந்த கிராமங்களிலே வீடுகளை  அமைத்து கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக திருமணமானவர்களாக இருந்தாலும் சரி 6௦  வயதுக்கு உட்ப்பட்ட வயதானவர்களாக இருந்தாலும் சரி,

புள்ளி என்ற விடயத்தை பாராது இந்த வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் ஊடாக  இந்த சிறந்த பணியை ஆற்றிவரும்  வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

அத்தோடு இந்த வீட்டுத்திட்டம் அமைக்கப்படுகின்ற வீதியினை எமது கோரிக்கைக்கு அமைய குறித்த வீதியை தார் வீதியைக  புனரமைப்பதற்கும் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்கள்  நிதியொதுக்கியிருக்ப்பதாகவும், அதற்கான ஒப்பந்தங்கள் இன்று கைச்சத்திடப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இடத்திலே ஊடக நண்பர்கள் இருக்கின்றார்கள் இந்த செய்தியினை நிச்சயமாக எடுத்து செல்ல வேண்டும் இந்த  பிரதேசத்தில் மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது குடிநீர் பிரச்சனை எமது பகுதியில் நேற்று ஒரு நாள் தான் மழை தூறியுள்ளது.

எம்மை நீர் பற்றாக்குறை வரட்சி வாட்டிவருகிறது நாங்கள் நீரை வழங்குவதற்கு  எம்மாலான வளங்களை பயன்படுத்தி பிரதேச செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினருடன் இணைந்து செய்துவருகிறோம்

இதுவரை நாம் ௪6 தண்ணீர் தாங்கிகளை வைத்து 5 வவுசர்களை கொண்டு நீர் வழங்கி வருகிறோம் எம்மால் முடியாத அளவில் உள்ளது இந்த மக்களுடைய தேவைக்கான நீரை வழங்குவதற்கு கடினமாக உள்ளது.

ஆனால் இங்குள்ள ஊடகங்கள் வாயிலாக அழைப்பு விடுக்கிறேன் அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் செல்வந்தர்கள் உதவி வழங்குபவர்கள் உதவி செய்வதாக இருந்தால் மிக விரைவாக  எமது மாந்தை கிழக்கு பிரதேச மக்களுக்கு  உதவ முன்வாருங்கள்

நாங்கள் நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை இடம் உதவி கோரியுள்ளோம் அவர்களால் பல கோடி ரூபா ஒதுக்கப்பட்டும் இதுவரை எம்மிடம் கிடைக்கவில்லை.

இன்று ஊடகங்கள் சம்மந்தப்பட்டவர்கள் அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோருக்கு    ஒரு அழைப்பை விடுக்கிறேன்  இந்த செய்தியை ஊடகங்கள் தாங்கி சென்று இரண்டு வருடமாக மழையின்றி கிணற்று நீர் வற்றி செல்கின்ற  இந்த பிரதேசத்தில் நீர்பற்றாக்குறையை  நிவர்த்தி செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது.

எமது வளங்களை பயன்படுத்தி எம்மாலான வளங்களை பயன்படுத்தி  நீர் விநியோகத்தை மேற்கொள்ளுகிறோம் ஒரு சில கிராமங்களில் இருந்த நீர் பற்றாக்குறை இப்போது மாந்தை கிழக்கு முழுவதுமாக ஏற்ப்பட்டுள்ளது.

வரட்சி வாட்டி எடுக்கிறது எனவே உதவி வழங்குனர்கள்  சம்மந்தப்பட்ட அமைச்சுக்களும் அதிகாரிகளும் எமக்கு உதவி மாந்தை கிழக்கின் நீர்ப்பற்றாக்குறையை தீர்க்க முன்வருமாறு அழைப்பு விடுக்கிறேன் எனவும் மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தயானந்தன் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோரிக்கைதயானந்தன்நீர் பற்றாக்குறைபிரதேச சபை தவிசாளர்மாந்தை கிழக்கு
Comments (0)
Add Comment