மானிப்பாயில் வாள்வெட்டு குழுவை சேர்ந்த நால்வர் கைது…

யாழ்  நவாலி அட்டகிரி பகுதியில் நான்கு வீடுகள் மற்றும் ஐஸ்கிறீம் விற்பனை வாகனம் ஒன்றும்  தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது.

குறித்த  சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது,

அட்டகிரி பகுதியில் முகத்தினை மறைத்தவாறு வீடுகளுக்குள் புகுந்த வன்முறை கும்பல், வீட்டில் இருந்த உடமைகளை சேதப்படுத்தி, வீடுகளுக்கு தீ வைத்தனர்.

அத்துடன், ஒரு வீட்டில் நின்ற ஐஸ்கிறீம் விற்பனைக்கு பயன்படுத்தும் வாகனத்தையும் தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இலக்க தகடுகள் மறைக்கப்பட்ட எட்டுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் சென்ற வன்முறை கும்பலே இந்த  செயலை செய்துள்ளனர்.

குறித்த வன்முறை தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, துரித விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், நேற்று இரவு நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கதுசந்தேக நபர்கள்பொலிஸார்மானிப்பாய்வாள்வெட்டு
Comments (0)
Add Comment