மாயமான விமானத்தை தேட ரிசாட் செயற்கைகோள்

சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றபோது காணாமல் போன விமானப்படை விமானத்தை தேடும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உதவ முன்வந்துள்ளது.  இதற்காக தனது ‘ரிசாட்’ செயற்கைக்கோளை பயன்படுத்தி வருகிறது. ராடாருடன் கூடிய இந்த செயற்கைக்கோள், இரவிலும், பகலிலும் புகைப்படங்கள் எடுக்கக்கூடியது. மேகத்தை ஊடுருவிப் பார்த்து, புகைப்படம் எடுக்கும். இத்தகவல்களை ‘இஸ்ரோ’ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் தெரிவித்தார்.  

காணாமல் போன விமானத்தில் இருந்து இதுவரை சமிக்ஜைகள் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.  சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றபோது காணாமல் போன விமானப்படை விமானத்தை தேடும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உதவ முன்வந்துள்ளது.  இதற்காக தனது ‘ரிசாட்’ செயற்கைக்கோளை பயன்படுத்தி வருகிறது. ராடாருடன் கூடிய இந்த செயற்கைக்கோள், இரவிலும், பகலிலும் புகைப்படங்கள் எடுக்கக்கூடியது. மேகத்தை ஊடுருவிப் பார்த்து, புகைப்படம் எடுக்கும்.

இத்தகவல்களை ‘இஸ்ரோ’ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் தெரிவித்தார்.  காணாமல் போன விமானத்தில் இருந்து இதுவரை சமிக்ஜைகள் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட ராணுவ விமானம் சிறிது நேரத்திலேயே சென்னை அருகே கடல் பகுதியில் திடீரென மாயமானது. விமான படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக சரக்கு விமானத்தில் 29 பேர் பயணம் செய்தனர்.

அந்த விமானத்தில் விமான ஊழியர்கள் 6 பேரும், விமானப்படை ஊழியர்கள் 11 பேரும், ராணுவ வீரர்கள் 2 பேரும், கடற்படை வீரர் ஒருவரும், கப்பல் மாலுமி ஒருவரும், கப்பல் படை ஊழியர்கள் 8 பேரும் இருந்தனர்.  மாயமான அந்த விமானத்தை விமானிகள் பத்சாரா, நந்தா ஆகியோர் இயக்கி உள்ளனர். அவர்களுக்கு வழிகாட்டியாக விமானி குணால், விமான பொறியாளர் ராஜன் மற்றும் 2 விமான ஊழியர்கள் இருந்தனர்.  விமானப்படையை சேர்ந்த உயர் அதிகாரி தீபிகா, விமானப்படை வீரர் சஞ்சீவ்குமார் மற்றும் 9 பேர் இதில் பயணம் செய்துள்ளனர்.

ராணுவ என்ஜினீயரிங் சேவை பிரிவில் பணிபுரிந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த விமல் மற்றும் ஒருவர் விமானத்தில் இருந்தனர்.  அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் உள்ள பழுதான கப்பல்களை சரிசெய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கப்பல் படை ஊழியர்கள் சாம்பமூர்த்தி, பிரசாத் பாபு, நாகேந்திர ராவ், சேனாபதி, பூபேந்திர சிங், மகாரானா, சின்னாராவ், சீனிவாச ராவ் ஆகிய 8 பேர் அந்த விமானத்தில் பயணம் செய்தது தெரியவந்துள்ளது.  மாயமான ராணுவ விமானத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள செம்பூர் கிராமத்தை சேர்ந்த கடலோர பாதுகாப்பு படை வீரர் முத்துக்கிருஷ்ணனும் (வயது 37) இருந்தார். அவருடைய கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. முத்து கிருஷ்ணன் தன் மனைவி, 2 மகன்களுடன் சென்னையில் வசித்து வந்தார்.

சென்னைசெயற்கை கோள்தேடுதல்படைபணி ரிசாட்மாயம்விமானம்
Comments (0)
Add Comment