மார்ச் 4-ம் தேதி அலைக்கற்றை ஏலம் தொடங்கும் – மத்திய அரசு

பிப்ரவரி 25-ம் தேதி தொடங்கவிருந்த அலைக்கற்றை ஏலத்தை மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது. மார்ச் 4-ம் தேதி அலைக்கற்றை ஏலம் தொடங்கும் என தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், அலைக்கற்றை ஒதுக்கீடு கோரி விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியும் பிப்ரவரி 6-ல் இருந்து பிப்ரவரி 16-க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 2-ஜி மற்றும் 3-ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சகம்அரசுஅலைக்கற்றைஏலம்ஒதுக்கீடுதேதிபிப்ரவரிமத்தியவிண்ணப்பம்
Comments (0)
Add Comment