மாற்றத்திற்கான இளையோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ” சமுதாயப் பணி” திட்டத்தின் கீழ்,
வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களின் கற்றல் நடவடிக்கையை ஊக்குவிக்கவும் பாடசாலை இடை விலகலை குறைப்பதற்குமாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மாணவர்களுக்கான ஒரு வருட பாடசாலைக் கல்விக்கான கற்றல் உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகள் வழங்கப்பட்டுள்ளன .
இந்நிகழ்வு 25.12.2018 அன்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டப த்தில் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற்றது.
இதன் முதற் கட்டமாக ரூபா 250,000.00 பெறுமதியான இவ்வுதவிக்காக புதுக்குடியிருப்பு மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 131 குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.