மாற்றுத்திறனாளிகளுக்கான சாரணர் படை மட்டக்களப்பில்…

மட்டக்களப்பில்  முதன்முதலாக  மாற்றுத்திறனாளிகளுக்கான சாரணர் படை நேற்றைய தினம்  சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன், சின்னமும் சூட்டப்பட்டுள்ளது.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் சம்மேளனம்,

மற்றும், விசேட தேவையுடையோர் சார்ந்து செயற்படும் அமைப்புகள் ,இணைந்து பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதன் ஒரு பகுதியாக மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ யின் அனுசரணையில் , 32பேர் கொண்ட சாரணர் படை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது  சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் அவர்களைக் கௌரவிக்கும் வகையிலும் சமூகததில் அவர்களுக்கும் அங்கீகாரம் வழங்கும் வகையிலும்,

மாற்றுத்திறனாளிகளுக்கான முதலாவது சாரணர் படை உருவாக்கப்பட்டுள்ளதாக  நிகழ்வில்  கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் தெரிவிததுள்ளார்.

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித்த போகொலலாகம, விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்,  மாவட்ட சாரண சங்கத் தலைவருமான மா.உதயகுமார்,

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

அங்கீகாரம்சாரணர்மட்டக்களப்புமாற்றுத் திறனாளிகள்
Comments (0)
Add Comment