தமிழீழ மண்மிட்பு போராட்டத்தில் வீரகாவியமான மாவீரர்களை நினைவுகூர்ந்து தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் கார்த்திகை 21 முதல் 27 வரை மாவீரர் வாரமாக அனுசரிக்கப்படுன்கிறது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மாவீரர் வார ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று காலை மாவீரர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி மாவீரர் வார ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது
தொடர்ந்து சிரமதான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் இம்முறை கடந்த முறையை விடவும் மிகவும் உணர்வெழிச்சியுடன் நிகழ்வுகள் இடம்பெற ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும், குறித்த வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் தமது பிள்ளைகளின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட நினைவுக்கற்கள் திரைநீக்கம் செய்யப்பட்டது.
நிகழ்வில் பெற்றோர் கலந்துகொண்டு தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த முன்வருமாறு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல பணிக்குழு செயலாளர் திரு சுப்பிரமணியம் பரமானந்தம் தெரிவிக்கின்றார்.