மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூவர் பலி- யாழ் குப்பிளானில் சம்பவம்..

யாழ்ப்பாணத்தில் இன்று பிறபகல் மழையுடன் கூடிய காலநிலை நிலவிவந்த வேளை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி
குப்பிழான் மயிலங்காடு பகுதியில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் திருநாவுக்கரசு கண்ணன் (வயது 48), கந்தசாமி மைனாவதி (வயது 52) மற்றும் ரவிக்குமார் சுதா (வயது 38) ஆகியோரே பலியாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் யாழ் போதனா மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது .

இந்நிலையில் குறித்த பகுதியில் மின்னல் தாக்கத்தில் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.

இதேவேளை நீண்ட நாட்கள் வெப்பமான காலநிலையை அனுபவித்த மக்கள், இன்று மழை பெய்துள்ளமைக்காக மகிழ்வதற்கு முன்னா் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளமை மக்களை கவலையடைய செய்துள்ளது.

உயிரிழப்புமூவர்
Comments (0)
Add Comment