மீண்டும் ஏப்ரல் 25ல் தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!

பட்ஜெட் குறித்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 25ம் தேதி தொடங்கி மே 13 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி மார்ச் 16ம் தேதி வரை நடைபெற்றது. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு ஏப்ரலில் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் உத்தரகாண்ட் அரசியல் நிலவரம் காரணமாக கூட்டத்தொடர் பாதியிலேயே நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 25ம் தேதி தொடங்கி மே 13 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விடுமுறை நாட்களை தவிர்த்து மொத்தம் 15 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் உத்தரகாண்ட் விவகாரம், உள்பட பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தொடர்ஜிஎஸ்டி மசோதாநாடாளுமன்றம்பட்ஜெட்
Comments (0)
Add Comment