மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை உருவாகுமா…?

இலங்கையில் 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக் கலவரத்தின் பிரதிபலனாக இலங்கை வரலாற்றில் ஏற்பட்ட கரும்புள்ளி 27 வருடங்களாக மக்களின் வாழ்வுக்கு தடையாக அமைந்ததாக லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போதும் அப்படியான நிலைமை உருவாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்புடன் நடந்த யுத்தம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நாடு அழிவுக்கு உள்ளானது.

நாட்டில் தற்போதும் அப்படியான நிலைமைக்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளது.

சிங்கள, தமிழ், முஸ்லிம் அடிப்படைவாதிகள் நாட்டுக்குள் உருவாகி வருகின்றனர். இதற்கு எதிராக அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

கடந்த காலத்தில் ஏற்பட்ட நிலைமையை விட எதிர்காலத்தில் நாடு எதிர்நோக்க போகும் நிலைமையானது மிகப் பயங்கரமானதாக இருக்கும் எனவும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம்இனக் கலவரம்இலங்கைதிஸ்ஸ விதாரண
Comments (0)
Add Comment