மீண்டும் சிறிலங்காவில் மலேரியா தொற்றுக்கு வாய்ப்பு

உலகில் மலேரியா அற்ற நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் நோய் தொற்றும் சாத்தியகூறு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குருணாகல் மாவட்டத்திலே மலேரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக குறித்த மாவட்ட மலேரியா தடுப்ப பிரிவின் பணிப்பாளர் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாட்டு பயணிகளாலும், இந்தியாவுக்கு தலயாத்திரை சென்று வருபவர்களாலுமே மலேரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக நந்தன குணதிலக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இவர்கள் குறித்து விஷேட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக குருணாகல் மாவட்ட மலேரியா தடுப்ப பிரிவின் பணிப்பாளர் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார்.

அரசுஇலங்கைஉலகம்தொற்றுநாடுநோய்மலேரியாவாய்ப்பு
Comments (0)
Add Comment