கடந்த சில நாட்களாக வடபகுதியில் பெய்தமழைகாரணமாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அப்பகுதி மக்கள் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதோடு, தற்காலிக முகாம்களில் அவர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் முல்லைத்தீவில் பெய்த கன மழை காரணமாக முத்தையன்கட்டின் நான்கு வான்கதவுகளும் மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதேவேளை கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகளும் இன்று காலை மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.