இந்நிலையில் இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விஷேட பேச்சுவார்தையொன்று இடம்பெறவுள்ளது.
குறித்த பேச்சுவார்தை இந்தியாவில் புதுடில்லியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை நாளை மறுதினம் கொழும்பிலும் விஷேட பேச்சுவார்தையொன்றும் இடம்பெறவுள்ளது.
மேலும் இப்பேச்சுவார்த்தையின் போது மீனவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தல், அவர்களின் வாழ்வாதாரத்திற்கான நிதி பங்கீடு என்பன தொடர்பிலும் எதிர்வரும் காலங்களில் கடலெல்லை பிரச்சினையை தடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுடில்லியில் நடைபெறும் குறித்த கூட்டத்தில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்தியாவின் விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் போன்றோர் கலந்துக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.