14 வயதுடைய அத்வே ரமேஷ் என்ற மாணவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர், கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் ஒரு நவீன கருவியை (Fishermen Lifeline Terminal-FELT) உருவாக்கி உள்ளார்.
இது ஒரு கையடக்க சாதனம் ஆகும் எனவும் இதன் மூலம் கடலில் மீனவர்களின் இருப்பிடத்தை எளிதாக அறிந்துகொள்ள முடியும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் பாதுகாப்புக்காக அத்வே ரமேஷ் கண்டுபிடித்துள்ள நவீன கருவிக்காக கூகுள் சமுதாய விருது (Google Community Impact Award) வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல், சுகாதாரம் உள்ளிட்டவை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சமூக நோக்கிலான சிறந்தத் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் கூகுள் சமுதாய விருது வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் 50 ஆயிரம் டாலர் கல்வி உதவித் தொகை பெறுவதற் கான போட்டிக்கு தேர்வுசெய்யப் பட்டுள்ள 20 பேரில் ஒருவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.