மீனவர்களின் வலையில் சீக்கிய சருகுபுலி – யாழில் சம்பவம்..

யாழ்.சுழிபுரம்- சவுக்கடி கடற்கரையில் மீனவர்களின் இறால் பிடிப்பதற்கான கூட்டுக்குள் சருகு புலி ஒன்று சிக்கியுள்ளது.

சவுக்கடி கடற்கரையில் மீனவர்கள் இறால் பிடிப்பதற்கான கூடுகளை வைப்பது வழக்கம்.

இவ்வாறு நேற்று மாலை கூடுகளை வைத்துவிட்டு சென்ற மீனவர்கள் இன்று காலை திரும்பவும் கடற்கரைக்கு வந்தபோது இறால் கூட்டுக்குள் சருகு புலி ஒன்றை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதேவேளை இவ்வகை புலிகளின் நடமாட்டம் வன்னி காடுகளிலேயே அதிகம் உள்ளநிலையில்   யாழ்ப்பாணத்தில் இவற்றை பார்ப்பது அரிது என்பது குறிப்பிடத்தக்கது.

சருகுபுலிசவுக்கடி கடற்கரைமீனவர்கள்யாழ்ப்பாணம்வலை
Comments (0)
Add Comment