மீனவர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க சுஷ்மாவிடம் அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து, அதிமுக எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 டெல்லி ஜவஹர்லால் நேரு பவனில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின்போது, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, மீனவர் பிரச்னை தொடர்பாக, மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதங்களை, சுஷ்மா ஸ்வராஜிடம், அதிமுக எம்.பிக்கள் வழங்கினர்.

 மேலும் அவர்களிடம் இருந்து கடிதங்களை பெற்றுக்கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இலங்கை கடற்படை தாக்குதல் தொடர்பாக, பிரதமருக்கு, முதலமைச்சர் எழுதியுள்ள கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 சுஷ்மா ஸ்வராஜுடனான சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை தலைவர் தம்பிதுரை, மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, கச்சத்தீவை மீட்க வேண்டும் என முதலமைச்சரின் சார்பில் வலியுறுத்தப்பட்டிருப்பதாக கூறினார்.

அதிமுக எம்.பி.க்கள்இலங்கை கடற்படைசுஷ்மா ஸ்வராஜுநிரந்தர தீர்வுமீனவர் பிரச்சனை
Comments (0)
Add Comment