மீன் மண்டையையும் சிலர் ஒதுக்கிவிடுவார்கள். ஆனால் நாம் ஒதுக்கும் மீன் கண்களை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.
கண் பார்வை பிரச்சனை உள்ளவர்கள் மீன் கண்களை சாப்பிட்டு வந்தால் பிரச்சனை நீங்கிவிடும். மீன் கண்களில் உள்ள ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்கள் கண் பார்வையை பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது.
மீன் கண்களை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு மற்றும் இதய பிரச்சனைகளுக்கான அபாயம் குறையும் என்று ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்களை அதன் கண்களுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி உடலில் இன்சுலின் அளவை குறைக்கும். அதோடு டைப்-1 சர்க்கரை நோயின் அபாயத்தையும் தடுக்கும்.
எனவே, இனி மீன் சாப்பிடும்போது மீன் கண்களையும் ஒதுக்காமல் சேர்த்து சாப்பிடுங்கள்.