மீன் பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கரை திரும்பவில்லை. புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன், ஜோதிமணி, காளிதாஸ் ஆகிய மீனவர்கள் 26 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். மறுநாளே கரை திரும்பியிருக்க வேண்டிய மீனவர்கள் இதுவரை வராததால், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு பகுதிகளில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை, கடல் சீற்றம் காரணமாக வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.