கடந்த மே மாதம் மலேசிய நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற தேர்தலில் மஹாதீர் முகமது தலைமையிலான பக்கட்டான் ஹரப்பன் கூட்டணி கட்சி வெற்றி பெற்றது.
மலேசிய பிரதமராக மஹாதீர் முகமது ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் அவர், தற்போது அமைச்சரவை விரிவாக்கத்திற்கு கூடுதலாக 15 பேரின் பெயர்களை வெளியிட்டுள்ளார்.
அதில், சீக்கியரான கோபிந்த் சிங் டியோ தொலைத்தொடர்பு அமைச்சராகவும், குலசேகரன் மனித வளத்துறை அமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சிவராசா ராசைய்யாவுக்கு, நீர் மற்றும் இயற்கை வளத்துறையும், வாய்தா மூர்த்திக்கு வெளியுறவுத்துறையும், ராஜரத்தினம் என்பவருக்கு பிரதமர் அலுவலகத் துறையில் இந்திய விவகாரங்களை கவனிக்கும் அமைச்சரவையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 28 பேர் கொண்ட அமைச்சரவையில், நான்கு தமிழர்கள் உட்பட ஐந்து இந்தியர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.