முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் மருத்துவர்கள் அப்பல்லோவுக்கு வருகை

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கப்பூரில் இருந்து மருத்துவர்கள் குழு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர் சிகிச்சையில் இருந்து வரும் ஜெயலலிதாவுக்கு, லண்டனில் இருந்து வந்த சிறப்பு மருத்துவர்களும், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கப்பூரில் இருந்து மருத்துவர்கள் குழு இன்று மீண்டும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

அப்பல்லோசிகிச்சைசிங்கப்பூர்மருத்துவர்கள்முதல்வர் ஜெயலலிதா
Comments (0)
Add Comment