அதன்படி முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று எழுந்து நிற்க பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து அவருக்கு இதேபோல் சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், முதல்–அமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு சிறப்பு பூஜை தினமும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று அ.தி.மு.க. மகளிரணி சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல், அ.தி.மு.க. தொண்டர்கள் அன்னதானமும் வழங்கினார்கள்.அப்பல்லோ மருத்துவமனை நுழைவுவாயில் அருகே உள்ள விநாயகர் கோவில் அருகே நேற்று இரவு அ.தி.மு.க. தொண்டர்கள் 9 பூசணிக்காய், 9 தேங்காய் உடைத்து சிறப்பு பூஜை செய்தனர்.