கிக்காஸ் டோரண்ட் (Kickass Torreents) இணையதளம் 100 கோடி டாலர் மதிப்புள்ள படங்கள், இசை ஆல்பங்கள் உள்ளிட்ட தகவல்களை திருடுவதாக புகார் எழுந்தது, இதையடுத்து அதன் உரிமையாளர் போலந்தில் கைது செய்யப்பட்டார். தொடர்ச்சியாக பார்க்கும் இணையதளங்களில் கிக்காஸ் இணையதளம் 69-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது டோரண்ட்ஸ் Torrentz.eu.தினமும் லட்சக்கணக்கானோர் அந்த இணையதளத்தை பயன்படுத்தி வந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி இணையதளம் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த இணையதளத்தில் தேடினால் எவ்வித லிங்க்கும் (link) அதில் தோன்றுவதில்லை