நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணைகள் நடாத்தப்படவுள்ளன.
அவர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடாத்த வேண்டுமென சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக முன்னரே வழங்கப்பட்ட எச்சரிக்கைகள் விடயத்தில் உயர் அதிகாரிகளாகவிருந்த அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு விரைவில் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.