செயற்பாட்டு அரசியலை தீவிரப்படுத்தியுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வடக்கில் ஆதரவு பெறுவதற்காக அங்கு விஜயம் செய்யவும் தீர்மானித்துள்ளார்.
இதற்காக ‘வியத்மக ” என்ற புத்திஜீவிகள் அமைப்பின் கிளை அலுவலகம் ஒன்றினை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு அவர் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன் அடிப்படையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாவது வாரத்தில் குறித்த அலுவலகம் யாழில் திறந்து வைக்கப்பட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விசேட கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ , கெஹேலிய ரம்புக்வெல்ல , பந்துல குணவர்தன ,
மற்றும் கனக ஹேராத் உள்ளிட்ட வியத்மக அமைப்பின் முக்கிய செயற்பாட்டளர்கள் கலந்துகொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன்போது நாட்டில் வாழும் அனைத்து சிறுபான்மை மக்களின் ஆதரவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு பரந்தளவிலான திட்டமொன்றினை வகுப்பது குறித்து அலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிகப்படுகின்றது.
இதேவேளை மாகாண சபை தேர்தலுக்கு பின்னர் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றி பெற வேண்டுமாயின் சிறுபான்மையின மக்களின் ஆதரவு முக்கியமானது என்பதால்,
சிறுபான்மை இன சமூகத்தின் புத்திஜீவிகளை இணைத்து செயற்பட வேண்டும் என இந்த சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் வடக்கில் ஆதரவு வேட்டைக்கான வியூகத்தை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.