ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு , பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு நேற்றைய தினம், இடம்பெற்றுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நடப்பு அரசியல் முறுகலை தீர்ப்பது குறித்தே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.
இதன்போது ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் இருந்து வெளியேறவேண்டுமெனில் அவருக்கு தேவையான உரிய பாதுகாப்பு அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் பிரதமர் ரணிலின் கோரிக்கைக்கு அமைய தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருவதாக கோத்தபாய ராஜபக்ஷ இதன்போது உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.