விமான நிலையத்தின் வெளிப்புறம் அவரது ஆதரவாளர்கள் பன்னீர் செல்வத்துக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்தனர்.
அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் கையில் கத்தியுடன் ஓ.பன்னீர் செல்வத்தை ஒருவர் நெருங்கியுள்ளார். இதனை கவனத்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் அந்த நபரை மடக்கிப்பிடித்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்.
கத்தியுடன் ஓ.பன்னீர் செல்வத்தை நெருங்கிய நபரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வால் விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.