முன்னாள் வடமாகாண முதலமைச்சரால் முல்லைத்தீவு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

முல்லைத்தீவு மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட ஒருதொகுதி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள்  கூட்டணியின் இளைஞர் அணியின் ஒழுங்குபடுத்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட  130 மாணவர்களுக்கு  மாங்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதோடு  கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட 130 மாணவர்களுக்கு கேப்பாபுலவு பகுதியிலும் வைத்து இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன

புலம்பெயர் தமிழ் மக்களது நிதி பங்களிப்பில் இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் தமிழ் மக்கள்  கூட்டணியின் ஸ்தாபகரும் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நீதியரசரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சி வி விக்னேஸ்வரன் மற்றும்  தமிழ் மக்கள்  கூட்டணியின் கொள்கை பரப்பு செயலாளரும் ஊடக பேச்சாளருமான க அருந்தவபாலன்,

தமிழ் மக்கள்  கூட்டணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அ றெஜி ,தமிழ் மக்கள்  கூட்டணியின் இளைஞர் அணியின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் கி கிருஸ்ணமீணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

இளைஞர் அணிகற்றல் உபகரணங்கள்தமிழ் மக்கள் கூட்டணி
Comments (0)
Add Comment