தொடந்து ஐ.நா செய்து வரும் துரோகம், சிறிலங்காவுக்கு மறைமுகமாக செய்துவரும் ஆதரவு ஆகியவற்றினை 2009, பிப் 12இல் உலகிற்கு உணர்த்தும் வகையில் ஐ.நாவின் மனித உரிமைக் கவுன்சில் முன்பு தன்னைக் கொடுத்து உலகிற்கு உரைத்த வீரனின் தினத்தில், தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமல்லாமல் உலகின் ஒடுக்கப்ப்டுகிற இனங்களுக்காக குரல் கொடுத்த வீரனின் தினத்தில் முற்றுகை இடுவோம்.
கடந்த வருடம் தோழமை அமைப்புகளுடன் சென்னை, மும்பை (விழித்தெழு நண்பர்கள் இயக்கம்) , தில்லி , பெங்களூர், நியூயார்க், பாரீஸ் என பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினோம். இம்முறை இன்னும் களத்தினை விரிவு செய்து உலகின் பல்வேறு நகரங்களில் முற்றுகை இடுவோம். தமிழ்ச் சமூகம் சர்வதேசச் சமூகமாக எழுந்து நிற்கட்டும்
நாம் வெல்வோம்.
மே பதினேழு இயக்கம்.